ADDED : ஜூலை 23, 2024 02:31 AM
புதுச்சேரி : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம் தர்மாபுரி பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்ட வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரனையில் அவர் ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்த சங்கர் 25, என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 210 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின் அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.