/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சாராயக் கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு புதுச்சேரி சாராயக் கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
புதுச்சேரி சாராயக் கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
புதுச்சேரி சாராயக் கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
புதுச்சேரி சாராயக் கடையில் தமிழக போலீஸ் திடீர் ரெய்டு
ADDED : ஜூலை 28, 2024 06:12 AM

புதுச்சேரி, : புதுச்சேரி சாராயக் கடையில் பாக்கெட் சாராயம் விற்றவரை தமிழக போலீசார் கைது செய்தனர். பாக்கெட் சாராயம் மற்றும் மெஷின்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராயத்திற்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனாலை, மாதேஷ் என்பவர் , சென்னையில் உள்ள கம்பெனியில் இருந்து வாங்கியது தெரிய வந்தது. புதுச்சேரி மடுகரையில் மாதேஷ் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவரின் ரகசிய இடத்தில் இருந்து மெத்தனால் பறிமுதல் செய்தது தொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழக போலீசாரிடையே உரசல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் தமிழக போலீசார் நடத்திய வாகன சோதனையில் 5 சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற விழுப்புரம் செஞ்சி சாலை அசோகபுரி அருண்குமார், 29; ராகவன்பேட்டை சிவக்குமார், 55; ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருபுவனை அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சாராய பாக்கெட் வாங்கியதாக தெரிவித்தார். பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய புதுச்சேரியில்தடை செய்யப்பட்டுள்ளது. கலால் துறை வழங்கும் பாட்டில் மற்றும் கேன்களில் இருந்து சில்லரையாக சாராயம் விற்பனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழக போலீசார் ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் விசாரித்தபோது, எப்.ஐ.ஆர்., இன்றி ஏன் விசாரிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதனால் மீண்டும் வளவனுார் சென்ற போலீசார் கைது செய்யப்பட்டவர் இருவர்மீதும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து வாக்குமூலம் பெற்றனர்.
அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் வளவனுார் விஜயக்குமார், கண்டமங்கலம் நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த 1,200 சாராய பாக்கெட்டுகளும், சாராயம்பாக்கெட் போடும் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், சாராய கடை காசாளர்அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மானந்தம், 52;என்பவரை கைது செய்து, அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக திருபுவனை போலீசார் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தமிழக போலீசார், புதுச்சேரி சாராயக்கடைக்குள் புகுந்து சாராயம், மெஷின் பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளரை கைது செய்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.