/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்
பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்
பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்
பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஜூலை 28, 2024 06:15 AM

புதுச்சேரி : பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் நிரந்தர பணியாளர்களாக 142 பேர் பணிபுரிந்து வந்தனர். இதில் 6 பேர் இறந்து விட்டனர்; 6 பேர் ஓய்வு பெற்றனர். ஊழியர்களுக்கு 50 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காமல் நிறுவனம் மூடப்பட்டது.
இது தொடர்பாக ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், விரைவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி நேற்று லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி மைதானத்தில் ஊழியர்களின் கலந்தாய்வு கூட்டம் குணா, ராம்குமார், ரமேஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி கருணை அடிப்படையில் பாப்ஸ்கோ நிறுவனத்தின் ரேஷன் கடைகளை திறந்து ஊழியர்களுக்கு பணி மற்றும் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர்கள் அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது என, விவாதிக்கப்பட்டது.