/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல் மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்
மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்
மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்
மாணவர்களுக்கு சீருடை எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூன் 14, 2024 06:21 AM

புதுச்சேரி: நாவற்குளம் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதையடுத்து, காலாப்பட்டு தொகுதி, நாவற்குளம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.
சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்று, மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்களை வழங்கி, பேசினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.