/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்ட விரோதமாக பேனர் வைத்தால் சிறை தண்டனை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம் சட்ட விரோதமாக பேனர் வைத்தால் சிறை தண்டனை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்
சட்ட விரோதமாக பேனர் வைத்தால் சிறை தண்டனை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்
சட்ட விரோதமாக பேனர் வைத்தால் சிறை தண்டனை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்
சட்ட விரோதமாக பேனர் வைத்தால் சிறை தண்டனை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம்
UPDATED : ஜூலை 19, 2024 05:14 AM
ADDED : ஜூலை 18, 2024 11:07 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள, சட்ட விரோத பதாகைகள் குறித்து, பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் தகவல் அளிக்கலாம் என, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அமைக்கப்படும், சட்ட விரோத பதாகைகள், விளம்பர பலகைகள் மற்றும் கட்-அவுட் படங்களை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது பொதுமக்களின் பாதுகாப்பையும், நடைபாதையாளர்கள் மற்றும் வாகன போக்குவரத்து சுதந்திரமாக இயங்குவதற்கும் உதவுகிறது.
சட்ட விரோத பதாகைகளை வைப்பவர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி சட்டம், 2000 பிரிவு,6,ன், கீழ் காவல்துறையிடம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அமைக்கப்படும் சட்ட விரோத பதாகைகளின் அகற்றவும் அவற்றை கட்டுப்படுத்த உறுதி பூண்டுள்ளது.
பிறந்தநாள், திருமணம், துவக்க விழாக்கள், கோவில் திருவிழாக்கள், திரைப்பட வெளியீடு, தொழில் விளம்பரங்கள் போன்ற எந்த காரணங்களுக்கு என்றாலும், பொது இடங்களில், சட்ட விரோத பதாகைகள் வைப்பவர், யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பதாகை வைப்பவர் தனி நபராக இருந்தாலும் அல்லது குழுவாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து சட்ட விரோத மற்றும் அனுமதியில்லா பதாகைகள் குறித்து புகைப்படம் எடுத்து, வாட்ஸ் ஆப்பில் 9443383418, என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
அந்த புகைப்படத்தில் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின் முத்திரை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், கூறும் போது 'சில சமயங்களில் சட்ட விரோத பதாகைகளை அகற்ற முயற்சிக்கும் அரசு ஊழியர்களை, சில பிரிவினர் தடுத்து நிறுத்தி தாக்குவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
பொது ஊழியர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது என்பது, பாரதிய தண்டனை சட்டம் -2023 பிரிவு 221,இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம், 'என தெரிவித்துள்ளார்.