ADDED : ஜூலை 18, 2024 11:06 PM

திருக்கனுார்: புதுச்சேரி மூத்த வேளாண் வல்லுனர்கள் சங்கம், பேங்க் ஆப் பரோடா சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு ஏரிக்கரையில் நடந்த விழாவிற்கு, சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினர். செயற் குழு உறுப்பினர் சுப்ரமணியன், பொருளாளர் பாகன், இணை செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தனர்.
இதில், பேங்க் ஆப் பரோடா மண்டல மேலாளர் ரவி, துணை மண்டல மேலாளர் ஜெயபிரசாத், கிளை மேலாளர்கள் கிருஷ்ணராஜ், ஞானவேல், தீரஜ் ஷெட்டி ஆகியோர் ஏரிக்கரையை சுற்றிலும் பல்வேறு வகையான 117 மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள் வழங்கப்பட்டன.இதில், புதுச்சேரி மூத்த வேளாண் வல்லுனர்கள் சங்க நிர்வாகிகள், திருக்கனுார் உழவர் உதவியக ஊழியர்கள் தங்கதுரை, ஜெயசந்திரன், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.