/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி
தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி
தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி
தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூலை 28, 2024 06:20 AM

புதுச்சேரி : புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், தென் மண்டல அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 17வது சீனியர் 8 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். போட்டியை சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், கிட்லா சத்யநாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் கூட்டமைப்பு துணை தலைவர்கள் கங்கதரய்யா, பிரசாத், இணை செயலாளர் ஞானவேல், செயற்குழு உறுப்பினர் முனிரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.