/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம் மூடல் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் எதிரொலி சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம் மூடல் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் எதிரொலி
சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம் மூடல் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் எதிரொலி
சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம் மூடல் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் எதிரொலி
சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம் மூடல் நேரு எம்.எல்.ஏ., போராட்டம் எதிரொலி
ADDED : ஜூலை 28, 2024 06:19 AM

புதுச்சேரி, : காமராஜர் சாலையில் அனுமதியின்றி தோண்டிய பள்ளம், நேரு எம்.எல்.ஏ., போராட்டம் காரணமாக மூடப்பட்டது.
காமராஜர் சாலையில், பிருந்தாவனம் ஸ்டேட் பாங்க் எதிரில் இருந்து சாரம் வரை, தனியார் கட்டடத்திற்கு மின் இணைப்பு தருவதற்காக மெகா சைஸ் மின் கேபிள் புதைக்க 500 மீட்டர் துாரத்திற்கு பள்ளம்தோண்டப்பட்டது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் பள்ளம் தோண்டியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த நேரு எம்.எல்.ஏ., பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி மின்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அனுமதியின்றி பள்ளம் தோண்டப்பட்டு வருவது தெரியவந்தது. மக்கள் வரிப்பணத்தில் பல கோடி செலவு செய்து அமைக்கப்பட்ட தார் சாலை அனுமதியின்றி தோண்டப்படுகிறது என, கலெக்டருக்கு நேரு எம்.எல்.ஏ., புகார் மனு அளித்தார். தொடர்ந்து, தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொதுப்பணித்துறை உத்தரவிட்டது.
நேற்று மதியம்மின்கேபிள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மண் கொட்டி மூடப்பட்டது. இப்பணிகளை நேரு எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.