ADDED : ஜூன் 05, 2024 03:05 AM
புதுச்சேரி: சமூக சேவகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், 41; இவர் சமூக சேவகராக உள்ளார். நேற்று இவரது மொபைல் போனில் புதுப்பேட்டையை சேர்ந்த மேகநாதன் என்பவர் அவதுாராக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மேகநாதனிடம்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.