/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு வீரர்களுக்கு பார்ம் - 2 சான்றிதழ் வழங்கல் விளையாட்டு வீரர்களுக்கு பார்ம் - 2 சான்றிதழ் வழங்கல்
விளையாட்டு வீரர்களுக்கு பார்ம் - 2 சான்றிதழ் வழங்கல்
விளையாட்டு வீரர்களுக்கு பார்ம் - 2 சான்றிதழ் வழங்கல்
விளையாட்டு வீரர்களுக்கு பார்ம் - 2 சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 05, 2024 03:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி தேக்வோண்டோ சங்கம் சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு, அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின், வீரர்களுக்கு 'பார்ம் - 2' எனப்படும், அங்கீகார சான்றிதழை வழங்கி வாழ்த்து கூறினார்.
இந்த நிகழ்வில் சங்க பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அரவிந்த், சர்வதேச நடுவர் பகவத்சிங், அமைப்பு செயலாளர் நந்தகுமார் கலந்து கொண்டனர்.
சங்க பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் கூறியதாவது விளையாட்டு வீரர்களுக்கு,அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பார்ம் - 1; தேசிய போட்டி - பார்ம் -2; மண்டல, பல்கலை போட்டி - 3; எஸ்.ஜி.எப்.ஐ., போட்டி - பார்ம் 4; ஆகியவை அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிகளில், வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு, புதுச்சேரி அரசு உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, 'சென்டாக்' மூலம், இட ஒதுக்கீட்டில், பல்வேறு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறது.
பயிற்சி பெறும் விளையாட்டுச் சங்கங்கள் உண்மையானவையா, அது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டவையா என தெரிந்து கொள்ள, https://yas.gov.in/ மற்றும் https://olympic.ind.in/ என்ற இணையதளத்தில் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். புதுச்சேரி மாநில விளையாட்டு துறைக்கு நேரடியாக சென்று, உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.