Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகம் கூடாதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ADDED : ஜூன் 08, 2024 05:47 AM


Google News
மதுரை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி நுாலகர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக 2019ல் ஜெயஸ்ரீ என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு பள்ளி நிர்வாகம் கோரிய ஒப்புதலை தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார்.

அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி பள்ளி தாளாளர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'நுாலகர் பதவியில் இருப்பவர் ஓய்வு பெறும்போது அப்பணியிடம் காலாவதியாகிவிடும். புதிய நுாலகரை நியமிக்க நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை. இது அரசாணையில் உள்ளது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்த தாளாளரின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசு தரப்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுாலகர் பணி ஓய்வு பெற்றால் அப்பணியிடம் நீக்கப்படும். இது பள்ளிக் கல்வித்துறையின் - 2018 அரசாணையில் உள்ளதால் ஒப்புதல் மறுக்கப்பட்டது. இதை தனி நீதிபதி உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளில் நுாலகம் மற்றும் நுாலகர்கள் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை எனில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அதே நடைமுறையை ஏன் பின்பற்றக்கூடாது என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜூன் 13ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us