/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவியிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு '6 ஆண்டு' பள்ளி மாணவியிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு '6 ஆண்டு'
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு '6 ஆண்டு'
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு '6 ஆண்டு'
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியருக்கு '6 ஆண்டு'
ADDED : ஜூன் 08, 2024 05:47 AM

விழுப்புரம், : மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த சரவணபாக்கத்தை சேர்ந்தவர் வேலு மகன் கிருஷ்ணன்,40; சிறுமதுரை அரசு பள்ளி ஆங்கில பாட ஆசிரியர். இவர், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு எடுத்தார். இரவு 8:30 மணிக்கு சிறப்ப வகுப்பு முடிந்ததும் பிற மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர் கிருஷ்ணன், ஒரு மாணவியை மட்டும், வகுப்பறையில் உள்ள தேர்வு பேப்பரை எடுத்து வரக்கூறினார்.
அப்போது, அந்த ஆசிரியரும், மாணவியின் பின்னால் சென்று, வகுப்பறையை மூடிவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். திடுக்கிட்ட மாணவி வெளியே ஓடி வந்து, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறினார்.
பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கிருஷ்ணனை கைது செய்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், அவர் மீது விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் 'போக்சோ' பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுமதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு 6 ஆண்டு சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கிருஷ்ணன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.