/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக பணியாற்றிய அரசு பள்ளி மாணவி காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக பணியாற்றிய அரசு பள்ளி மாணவி
காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக பணியாற்றிய அரசு பள்ளி மாணவி
காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக பணியாற்றிய அரசு பள்ளி மாணவி
காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக பணியாற்றிய அரசு பள்ளி மாணவி
ADDED : ஜூலை 18, 2024 11:02 PM

காரைக்கால்: காரைக்காலில் ஒருநாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி லித்யாஸ்ரீ நேற்று கலெக்டர் மணிகண்டனுடன் சிறப்பாக பணியாற்றினார்.
காரைக்கால் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகள், பிரச்னைகள் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் ஐ.ஏ.எஸ்., போன்ற மேல்படிப்புகளை படிக்க ஒரு முன்னுதாரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என கலெக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் நேற்று காரைக்கால்மேடு பக்கிரிசாமிப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி லித்யாஸ்ரீ. முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாணவி காலை 10மணிக்கு வருகைப்புரிந்தார்.
இவரை கலெக்டர் மணிகண்டன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அவரது இருக்கை அருகில் அமரவைத்தார்.
பின் நளன் குளத்தை சுற்றி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பேசிய கலெக்டர் மணிகண்டன் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை முறைப்படுத்த வேண்டும். தரமற்ற உணவுகள் வழங்குவதை தடுப்பதற்கு நிரந்தர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த கல்வி மற்றும் பேச்சாற்றல் ஆகியவை குறித்து தேர்வு நடத்தி சிறந்த மாணவியாக இவர் கல்வித்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கலெக்டருடன் திட்டப்பணிகள் குறித்து கற்றுக்கொண்டு செயல்படுவார். ஒரு நாள் கலெக்டருடன் பணியாற்றிய அனுபவங்களை சக மாணவ மாணவிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர்களுக்கு உதவும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
பின்னர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.உடன் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,மேல்நிலைக்கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி,முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.