ADDED : ஜூலை 29, 2024 05:09 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் நடந்த தொடர் மருத்துவ கருத்தரங்கில், ஏராளமான டாக்டர்கள் பங்கேற்றனர்.
இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, சென்னை அப்பல்லோ கேன்சர் மையம் ஆகியன சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கம், புதுச்சேரி, அண்ணாசாலை, தி ரெசிடென்சி டவர் ஓட்டலில் நடந்தது. இதில், முதுகெலும்பு அறுவை சிகிச்சை சீனியர் நிபுணர் அப்பாஜி கிருஷ்ணன், முதுகெலும்பு சிதைவு நோய் குறித்து பேசினார்.
கேன்சர் நோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் குறித்து, கேன்சர் மற்றும் ரத்தவியல் சீனியர் நிபுணர் சங்கர் சீனிவாசன் விளக்கினார். கதிர்வீச்சு புற்றுநோயியல் குறித்து, சீனியர் நிபுணர் மகாதேவ் போதராஜூ விளக்கம் அளித்தார். இதில், இந்திய மருத்துவ சங்கம், புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.