/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் - முதல்வர் திடீர் சந்திப்பு கவர்னர் - முதல்வர் திடீர் சந்திப்பு
கவர்னர் - முதல்வர் திடீர் சந்திப்பு
கவர்னர் - முதல்வர் திடீர் சந்திப்பு
கவர்னர் - முதல்வர் திடீர் சந்திப்பு
ADDED : ஜூலை 29, 2024 05:39 AM
புதுச்சேரி, : கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் திடீரென சந்தித்து பேசினார்.
புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தமிழிசை ராஜினாமா செய்த பின்பு, ஜார்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். கோயம்புத்துார் சென்றிருந்த கவர்னர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி திரும்பினார். நாடு முழுதும் 12 மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டனர். அதில், கவர்னர் ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு கவர்னர் மாளிகை வந்த முதல்வர் ரங்கசாமி, கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதன்பின்பு மாலையில் கவர்னர் ராதாகிருஷ்ணன் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.
இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ள கவர்னர் ராதாகிருஷ்ணனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினேன். அமைச்சர் இலாக்கா குறித்து பிறகு கூறுகிறேன்' என்றார்.