/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் உரையில் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது; செந்தில்குமார் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு கவர்னர் உரையில் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது; செந்தில்குமார் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கவர்னர் உரையில் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது; செந்தில்குமார் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கவர்னர் உரையில் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது; செந்தில்குமார் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கவர்னர் உரையில் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது; செந்தில்குமார் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : மார் 12, 2025 06:40 AM
புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செந்தில்குமார் பேசியதாவது:
கவர்னர் தமிழில் பேசியதும், வெளிப்படையான அரசியலை தவிர்ப்பதும் பாராட்டுதலுக்குரியது. முதல்வரின் ஆதங்கத்தை போக்கும் வகையில் முதல்வர் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது நல்ல நடைமுறை.
தனிநபர் வருமானம் ரூ. 3.02 லட்சமாக உயர்ந்திருந்தால், மாதம் 25 ஆயிரம் வருமானம் ஈட்ட வேண்டும். அரசின் பல துறைகளில் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் கூடுதலாக்கி, 18 ஆயிரமாக உயர்த்தி உள்ளோம். அதுவும் பல துறைகளில் நடைமுறைக்கு வரவில்லை. அதனால் ரூ. 25 ஆயிரம் சராசரி கணக்கீடு மாயை.
கவர்னர் அறிக்கையின் கணக்கீடு தரவுகளில் வித்தியாசம் உள்ளது. கணக்கீட்டிற்கு எடுத்து கொண்ட ஆண்டு 2020-21 கொரோனா காலம். அப்போது பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் வீழ்ச்சி அடைந்திருந்தது. அந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் சராசரி தரவுகளை தராது. விவசாயத்தில் 50 சதவீத்திற்கு மேலாக உற்பத்திக்கு மேல் வருமானம் கிடைப்பதாக கூறுவதும் தவறு.
பிரதமர் கிராம சாலை திட்டத்தில் 100 கி.மீ., சாலை அமைக்க 60 கோடி ஒதுக்கியும், பணிகள் நடக்காமல் கோப்பு அளவில் முடங்கி கிடக்கிறது. பெஸ்ட் புதுச்சேரி என்பது கானல் நீராகவே உள்ளது. அதற்கு முலாம் பூசி வேறு ஒரு திட்டம் போல உரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. கவர்னர் உரையில் தொலை நோக்கு திட்டத்தை முன்வைத்து உடனடியாக செய்ய வேண்டிய திட்டங்களை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.
இவைகளை வலியுறுத்தும் விதமாக, பாரதியார் பாடலில் சில மாற்றங்கள் செய்து அவையில் முன் வைக்கிறேன்.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே உண்மை வேண்டும்
தொலைநோக்கு திட்டம் வேண்டும்
குறுகிய காலத் தேவைகள் கைப்பட வேண்டும்
கனவு கை பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும், உரிமையும் வேண்டும்
இந்தியாவிலே புதுச்சேரிக்கு பெருமை வேண்டும்
புதுச்சேரி மண்ணும், மக்களும் பயனுற வேண்டும.
மாநில உரிமை எனும் வானில்
நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும்.
ஆகவே தொலைநோக்கு திட்டத்துடன் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றார்.