/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய்ப்பால் விற்ற மருந்தகத்திற்கு 'சீல்' தாய்ப்பால் விற்ற மருந்தகத்திற்கு 'சீல்'
தாய்ப்பால் விற்ற மருந்தகத்திற்கு 'சீல்'
தாய்ப்பால் விற்ற மருந்தகத்திற்கு 'சீல்'
தாய்ப்பால் விற்ற மருந்தகத்திற்கு 'சீல்'
ADDED : ஜூன் 01, 2024 04:37 AM

சென்னை, : சென்னையில், தாய்ப்பாலை விற்பனை செய்த மருந்தகத்திற்கு, உணவு பாதுகாப்பு துறையினர், நேற்று 'சீல்' வைத்தனர்.
சென்னை, மாதவரம் கே.கே.ஆர்., கார்டன் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், தலைமையிலான குழுவினர் நேற்று, செம்பியம் முத்தையா, 40, என்பவரின்,'லைப் வேக்சின் ஸ்டோர்' என்ற மருந்தகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில், 45 பிளாஸ்டிக் கன்டெய்னர்களில், 200 மி.லி., அளவுடைய 90க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனைக்காக தாய்ப்பால் வைத்திருந்ததும், இதனை ஏழை மக்களிடம் ஏஜென்டுகள் வாயிலாக வாங்கி விற்பது தெரிய வந்தது.
தாய்ப்பால் விற்பனையை, உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் முற்றிலுமாக தடை செய்துள்ள நிலையில், அதை விற்பனை செய்த, மருந்தகத்திற்கு, உணவு பாதுகாப்பு துறையினர், 'சீல்' வைத்தனர். மேலும், தாய்ப்பால் விற்பனைக்கான ஆவணங்கள், தகவல் தொடர்புகளை கைப்பற்றினர்.