/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
ADDED : ஜூன் 02, 2024 04:56 AM

புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று, ஓவியம் தீட்டினர்.
புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு நில மறுசீரமைப்பு பாலை வனங்கள் வறட்சி தாங்கும் தன்மை என்ற கருப்பொருளில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
இதனையொட்டி, கடந்த மாதம் 26ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி கல்லுாரிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை அறிவியல் கோளரங்கில், என் நிலம் என் எதிர்காலம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
போட்டியை துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட்ட இந்த ஓவியப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஓவியம் தீட்டினர்.
ஏற்பாடுகளை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.