/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூன் 02, 2024 04:57 AM

புதுச்சேரி: கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி காவலர்கள் குடியிருப்புகளில் டெங்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி நலவழித்துறை, தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பங்கஜாக் ஷன், சுகாதார ஆய்வாளர் லியோனா முன்னிலை வகித்தனர்.
கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா, காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
சுகாதார உதவி ஆய்வாளர் சிவக்குமார், டெங்கு பரவும் விதம், அறிகுறிகள் பற்றி எடுத்துரைத்தார்.
சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, காவலர் பயிற்சி பள்ளியின் காவலர்கள், குடியிருப்புகளில், வீட்டு உபயோகப் பொருட்களில், நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்.
மேலும், 4 நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையை அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய வலியுறுத்தி, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காவல் பயிற்சி பள்ளி காவலர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வி, விருகம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.