/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணிக் கடையில் ரூ.1 லட்சம் 'அபேஸ்' துணிக் கடையில் ரூ.1 லட்சம் 'அபேஸ்'
துணிக் கடையில் ரூ.1 லட்சம் 'அபேஸ்'
துணிக் கடையில் ரூ.1 லட்சம் 'அபேஸ்'
துணிக் கடையில் ரூ.1 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 02, 2024 04:49 AM
காரைக்கால்: காரைக்காலில் ரெடிமேடு துணிக் கடையில் ரூ.1 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், பாரதியார் சாலையில் தனியார் மஹாலில் கல்கத்தா காட்டன் பஜார் ரெடிமேடு துணிக் கடையை திருப்பத்துாரை சேர்ந்த பிரபு என்பவர் நடத்தி வருகிறார். இக்கடையில் கிருஷ்ணகிரி மாவட்ட, பர்கூர், வரட்டன பள்ளி பகுதியை சேர்ந்த ரூகேஷ், 37, என்பவர் வேலை செய்து வந்தார்.
உரிமையாளர் பிரபு வியாபாரம் செய்யும் பணத்தை கல்லாவில் வைப்பது வழக்கம்.
இது ரூகேஷிற்கு தெரியும். கடந்த 24ம் தேதி கல்லாவில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை காணவில்லை. ரூகேஷ் கடையில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவர், கிடைக்கவில்லை.
இதுக்குறித்து நகர காவல் நிலையத்தில் பிரபு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, ரூகேைஷ தேடி வருகின்றனர்.