/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மாநில அந்தஸ்திற்கு தீர்மானம் மட்டும் போதாது' நேரு எம்.எல்.ஏ., பேச்சு 'மாநில அந்தஸ்திற்கு தீர்மானம் மட்டும் போதாது' நேரு எம்.எல்.ஏ., பேச்சு
'மாநில அந்தஸ்திற்கு தீர்மானம் மட்டும் போதாது' நேரு எம்.எல்.ஏ., பேச்சு
'மாநில அந்தஸ்திற்கு தீர்மானம் மட்டும் போதாது' நேரு எம்.எல்.ஏ., பேச்சு
'மாநில அந்தஸ்திற்கு தீர்மானம் மட்டும் போதாது' நேரு எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : மார் 12, 2025 06:38 AM
புதுச்சேரி, : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி தோல்வி திட்டமாகி உள்ளது. இத்திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மேலும், இத்திட்டத்தில் செய்ததாக கூறப்படும் பணிகள் எதிர்பார்த்த வடிவத்தில் இல்லாமலும், தரமின்றி உள்ளது. இதனால் இத்திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சவாலாக உள்ளது. இதற்கு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய காரணம்.
வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.7ல் இருந்து நடப்பு நிதியாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அப்படி இருக்கும்போது இது எந்த மாதிரி கணக்கெடுப்பு என்று தெரியவில்லை. இதனை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.
இதேபோல் 21,792 பேருக்கு வேலைவாய்ப்பு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தாக கவர்னர் தெரிவித்துள்ளனர். அரசு பணியமர்த்தப்பட்ட 2,444 இளைஞர்களை தவிர்த்து மீதம் உள்ள 19,348 இளைஞர்கள் தனியார் துறைகளில் நிரந்தரமாக பணியில் உள்ளனரா, அவர்கள் நிலைமை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதற்கான கணக்கெடுப்பு அரசிடம் உள்ளதா என்பதை விளக்க வேண்டும்.
நமக்கு மாநில சுயாட்சி இல்லை, நிதி கமிஷனில் புதுச்சேரியை இடம்பெற செய்யவில்லை. கடன் சுமைகள் பெருகி கொண்டே செல்கிறது. அதற்கான வட்டி தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எல்லாம் மத்திய அரசு உணராமல் இந்த மாநிலத்தை வஞ்சிக்கிறது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செய்வதற்கு போதுமான நிதியை தர மறுக்கிறது.
மாநில அந்தஸ்து தொடர்பாக சட்டசபையில் வெறும் தீர்மானம் மட்டும் போடாமல் முதல்வர் ரங்கசாமி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.