/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் இல்லை; கவர்னர் உரை குறித்து அனிபால்கென்னடி குற்றச்சாட்டு மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் இல்லை; கவர்னர் உரை குறித்து அனிபால்கென்னடி குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் இல்லை; கவர்னர் உரை குறித்து அனிபால்கென்னடி குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் இல்லை; கவர்னர் உரை குறித்து அனிபால்கென்னடி குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் இல்லை; கவர்னர் உரை குறித்து அனிபால்கென்னடி குற்றச்சாட்டு
ADDED : மார் 12, 2025 06:37 AM
புதுச்சேரி : கவர்னர் உரையின் மீதான தீர்மானத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது:
உரையில் எந்த ஒரு கொள்கைத் திட்டங்களோ மாநில வளர்ச்சிக்கான வழிகாட்டுதலோ இல்லை. மாநில அந்தஸ்த்துக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலை உள்ளது.
கவர்னர் உரையில் குறைந்தபட்சம் 16வது நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் உரையில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனிநபர் வருமானம் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து இருக்கிறது என, சொல்லி இருப்பது யாருக்கு என்ன பயன்.
பசியின்மை சுகாதாரம் உள்நாட்டு கட்டமைப்பு போன்ற குறியீடுகளில் நாம் முன்னேறியும் எந்த பலனும் இல்லை. நம்மை விட தனிநபர் வருமானத்திலும் உள்நாட்டு உற்பத்தியிலும் குறைவான வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் மாநில அந்தஸ்த்தோடு இருக்கும் போது நாம் ஏன் இன்னும் மாநில அந்தஸ்து பெறவில்லை.
பாசிக், பாப்ஸ்கோ, பான்டெக்ஸ் மற்றும் 5 பஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு ஏறக்குறைய 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்து உள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இன்னும் வீதியிலே இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரக்காணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றனர். தனியார் தொழிற்சாலைகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர். நிலை இப்படி இருக்க வேலை வாய்ப்பின்மை குறைந்து விட்டது என்று சொல்ல அரசுக்கு எப்படி மனம் வந்தது.
ரெஸ்டோ பார்களை கொண்டு ஆன்மிக பூமியைக் கெடுக்கிறார்கள். இது தான் இவர்கள் கூறுகின்ற பெஸ்ட் புதுச்சேரி. இவ்வாறு அவர் பேசினார்.