/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 08, 2024 04:33 AM

புதுச்சேரி : காமராஜ் சாலையில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அதிரடியாக அகற்றி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வார விடுமுயைான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகமாக புதுச்சேரிக்கு வருதால், நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காமராஜர் சாலையில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கடைகளுக்கு செல்பவர்கள் சாலையிலேயே பைக், கார்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக வடக்கு பகுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதையடுத்து, கோரிமேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் காமராஜர் சாலையில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் பகுதி, சாரம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்த கடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சாலையில் நிறுத்திருந்த பைக்குகளை அகற்றினர். கடைகளுக்கு வரும் மக்கள் தங்கள் எடுத்து வரும் வானங்களை ஓரமாக நிறுத்த சொல்லுமாறு, கடை உரிமையாளர்களிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.