/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 04:33 AM
வில்லியனுார் : வில்லியனுார் பகுதியில் பன்றி வளர்ப் போருக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் டெங்கு, காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே தாழ்வான பகுதியில் காலி மனைகள் வைத்திருப்போர் சமப்படுத்தி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறும் பட்சத்தில் கழிவுநீர் தேங்கி உள்ள மனை உரிமையாளருக்கு அபராதம் விடுக்கப்படும்.
மேலும் வில்லியனுார் பகுதியில் பன்றிகளால் பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெருக்களில் சுற்றித் திரியும் பன்றிகளை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
எனவே அரசு அனுமதியின்றி பன்றி வளர்ப்போர் இரு வாரத்திற்குள் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். மீறினால், பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.