ராஜிவ் சதுக்கத்தில் பேனர் அகற்றம்
ராஜிவ் சதுக்கத்தில் பேனர் அகற்றம்
ராஜிவ் சதுக்கத்தில் பேனர் அகற்றம்
ADDED : ஜூன் 12, 2024 03:06 AM

புதுச்சேரி : ராஜிவ்காந்தி சதுக்கத்தில் வைக்கப்பட்ட பேனரை நெடுஞ்சாலை துறையினர் அதிரடியாக அகற்றினர்.
புதுச்சேரியில் பேனர் கலாசாரத்தால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பல்வேறு வகையில் விபத்துகள் நடந்து வருகிறது. பேனர்கள் வைக்க கூடாது என, நகராட்சி மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையடுத்து, சப் கலெக்டர் உத்தரவின் பேரில், புதுச்சேரியில் நகராட்சி அதிகாரிகள் பேனர்களை அகற்றினர்.
லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மீண்டும் புதுச்சேரியில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக, ராஜிவ் சதுக்கம் அருகே பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று நெடுஞ்சாலை துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அதிரடியாக அகற்றினர்.