/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றிய எஸ்.ஐ., 'மாஜி' இன்ஸ்.,க்கு 2 ஆண்டு சிறை கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றிய எஸ்.ஐ., 'மாஜி' இன்ஸ்.,க்கு 2 ஆண்டு சிறை
கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றிய எஸ்.ஐ., 'மாஜி' இன்ஸ்.,க்கு 2 ஆண்டு சிறை
கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றிய எஸ்.ஐ., 'மாஜி' இன்ஸ்.,க்கு 2 ஆண்டு சிறை
கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றிய எஸ்.ஐ., 'மாஜி' இன்ஸ்.,க்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 22, 2024 04:28 AM

புதுச்சேரி: ஏனாம் கலவர வழக்கில் ஆவணங்களை மாற்றி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் மாஜி இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியின், ஏனாம் பிராந்தியத்தில், ரிஜென்சி செராமிக் என்ற டைல்ஸ் கம்பெனி உள்ளது. இக்கம்பெனி தொழிலாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி சம்பள உயர்வு தொடர்பாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில் போலீஸ் காவலில் இருந்த தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மர்மான முறையில் இறந்தார்.
இதனைக் கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. தொழிற்சாலையில் நிறுத்தி வைத்திருந்த லாரிகள், பஸ், பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. போலீசாரின் தடியடி, துப்பாக்கி சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கம்பெனியின் மேலாண்இயக்குனர் கொலை செய்யப்பட்டார்.
போலீஸ் ஸ்டேஷனை சூறையாடியது தொடர்பாக 84 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 46 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஏனாமின் அப்போதைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மீது சதி திட்டம், ஆவணங்களை மாற்றி எழுதிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு புதுச்சேரி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் பெரியசாமி, தற்போது புதுச்சேரி கிழக்குபோக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.