/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா
வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா
வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா
வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 22, 2024 04:27 AM

வில்லியனுார், : வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா அமைச்சர்கள் முன்னிலையில் திருக்கோவிலுார் ஜீயர் வடம் பிடித்து துவக்கிவைத்தார்.
வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 20ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழாவில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தில் கடந்த 17 ம் தேதி மாலை கருடசேவை நிகழ்ச்சியும், 18ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா, 19ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. முக்கிய விழாவாக நேற்று(21ம் தேதி) தேர் திருவிழா நடந்தது. காலை 7:00 மணியளவில் திருக்கோவிலுர் 26வது பட்டம ஜீயார் மாடாதிபதி தேஹளிச ராமானுாஜ ஜீயர்சுவாமிகள் வடம்பிடித்து துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, இந்து சமய அறநிலைய ஆணையர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேர்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று இழுத்தனர். தேர் வில்லியனுார் மாட வீதிகள் வழியாக காலை 9:30 மணியளவில் மீண்டும் தன் நிலையை வந்தடைந்தது. வரும் 24ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 25ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்கின்றனர்.