/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு 29ம் தேதி தி.மு.க., போராட்டம் பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு 29ம் தேதி தி.மு.க., போராட்டம்
பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு 29ம் தேதி தி.மு.க., போராட்டம்
பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு 29ம் தேதி தி.மு.க., போராட்டம்
பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு 29ம் தேதி தி.மு.க., போராட்டம்
ADDED : ஜூலை 28, 2024 07:19 AM

புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சி மாற்றத்தை செய்ய தி.மு.க., விரும்பவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார்.
அவர், கூறியதாவது;
மத்திய பா.ஜ., அரசு தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், தன் கட்சிக்கு ஓட்டு அளிக்காத மக்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் வகையில், நிதி பகிர்ந்தளிக்காமல் புறக்கணித்துள்ளது. புதுச்சேரி ஒட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சியை புறக்கணித்தனர்.
கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ. 425 கோடி நிதி வழங்கவில்லை.இ.சி.ஆர்., ரயில் இணைப்பு பாதை திட்டம், புதுச்சேரிக்கு உரிய நிதி பகிர்வு வழங்கப்படவில்லை.
இந்த கோபத்தின் வெளிப்பாட்டால், முதல்வர் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். இதனை கண்டித்து வரும் 29ம் தேதி தி.மு.க., முற்றுகை போராட்டம் நடத்தும்.பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தேவைக்காக போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
அமைச்சர், வாரிய தலைவர் என்பது எல்லாம் அவர்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்னை. இதனை பயன்படுத்தி சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுப்படாது.
பா.ஜ., ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தாலும், என்.ஆர்.காங்., கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளது. மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்ற எதிர்க்கட்சி என்ற முறையில் தொடர்ந்து போராடி வருகிறோம்.
பல பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை கற்றுத் தர ஆசிரியர்கள் இல்லை. இவ்வாறு அவர், தெரிவித்தார்.