Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதுநிலை பல் மருத்துவ படிப்பு திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ படிப்பு திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ படிப்பு திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ படிப்பு திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியீடு

ADDED : ஜூலை 20, 2024 04:38 AM


Google News
புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான திருத்தப்பட்ட வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதுநிலை பல் மருத்துவம் (எம்.டி.எஸ்.) படிப்புகளுக்கு, முதுநிலை நீட் தேர்வு மதிப்பெண் மூலம் சேர்க்கை நடக்கிறது.

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள முதுநிலை பல் மருத்துவம் (எம்.டி.எஸ்.,) படிப்பு சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, மைனாரிட்டி மற்றும் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு இடங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு மெரிட்டி லிஸ்ட் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான மெரிட் லிஸ்ட், எஸ்.சி., எஸ்.டி., பி.டி., ஒ.பி.சி., எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., இ.டபிள்யு.எஸ்., ஆகிய பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்குள், சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் டேஸ்போர்டு மூலம் தெரிவிக்கலாம்.

முதுநிலை பல் மருத்துவ இடங்களின் சீட் மெட்ரிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்ப பாடத்தை, முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதிற்கு வரும் 22ம் தேதி 3:00 மணிக்கு முன்னதாக அப்டேட் செய்ய வேண்டும்.

விருப்ப பாடம் தேர்வு செய்யாத விண்ணப்பதாரர்கள் முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீட்டில் பரிசிலிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us