/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.சி.டி.வி., பதிவில் சிக்கிய பைக் திருட்டு சம்பவம் சி.சி.டி.வி., பதிவில் சிக்கிய பைக் திருட்டு சம்பவம்
சி.சி.டி.வி., பதிவில் சிக்கிய பைக் திருட்டு சம்பவம்
சி.சி.டி.வி., பதிவில் சிக்கிய பைக் திருட்டு சம்பவம்
சி.சி.டி.வி., பதிவில் சிக்கிய பைக் திருட்டு சம்பவம்
ADDED : ஜூலை 20, 2024 04:39 AM
புதுச்சேரி: வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த மொபட்டை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் தந்தை பெரியார் நகர் 6வது குறுக்கு தெருவில், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர்.
அங்கு வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை அந்த மர்ம நபர்கள் திருடி, டோப் செய்து எடுத்து சென்றனர். மொபைட்டை திருடி செல்லும் காட்சி, நகர் பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள நகரில் பகல் நேரத்திலேயே துணிச்சலாக மொபட்டை எடுத்து சென்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.