/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது மக்கள் எதிர்ப்பு சாராயக்கடை அகற்றம் பொது மக்கள் எதிர்ப்பு சாராயக்கடை அகற்றம்
பொது மக்கள் எதிர்ப்பு சாராயக்கடை அகற்றம்
பொது மக்கள் எதிர்ப்பு சாராயக்கடை அகற்றம்
பொது மக்கள் எதிர்ப்பு சாராயக்கடை அகற்றம்
ADDED : ஆக 07, 2024 06:18 AM

பாகூர் : பாகூரில் சாலையோரமாக திறந்த வெளியில் இயங்கி வந்த சாராயக்கடைக்கு, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர், ஏரிக்கரை வீதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் சாராயக்கடை இயங்கி வந்தது. இந்த கடையை ஏலம் எடுத்த நபர், அந்த இடத்தில் சாராயக் கடையை திறக்க சென்றுள்ளார். அதற்கு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு சாராயக்கடைக்கு பதிலாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, அங்கன்வாடி மைய பெயர் பலகையை அமைத்தனர்.
இதையடுத்து, அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தில் சாராயக்கடையை மாற்றி அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, பாகூர் பேட் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, பாகூர் ஏரிக்கரையில் சாலையோரமாக திறந்து வெளியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அங்கு சென்று ஓப்பந்ததாரரை அழைத்து இப்பகுதியில் எந்த வடிவிலும் சாராயம் விற்க கூடாது என, கூறி சாராய கேன், டிரே உள்ளிட்ட பொருட்களை அதிரடியாக அகற்றி மூட்டை கட்டி, கடை ஊழியர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.