ADDED : ஆக 07, 2024 06:18 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாளையொட்டி, தவளகுப்பம் சந்திப்பில் புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரி தாளாளர் கணேஷ் அன்னதானம் வழங்கினார்.
முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் சந்திப்பில் புதுச்சேரி வேளாண் அறிவியல் கல்லுாரி தாளாளர் கணேஷ் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ரமேஷ், பச்சையப்பன், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், சக்திவேல், ஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.