/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிவாரணம் கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு நிவாரணம் கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு
நிவாரணம் கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு
நிவாரணம் கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு
நிவாரணம் கேட்டு மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 12, 2024 11:53 PM

புதுச்சேரி : விஷவாயு தாக்கி, உயிரிழந்ததோர் குடும்பத்திற்கு நிவராண தொகை உயர்த்தி வழங்க கோரி நடந்த மறியல் போராட்டத்தால் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
ரெட்டியார்பாளையம், புதுநகர், 4வது குறுக்கு தெருவில் நேற்று முன்தினம் காலை பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, கழிவறை வழியாக வெளியேறிதால், 3 பேர் உயிரிழந்தனர்.
மூவரின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம், காமாட்சி, செந்தாமரை குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரண வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி, மா.கம்யூ., மற்றும் வி.சி.கட்சியினர் விழுப்புரம் நெடுஞ்சாலையில், கம்பன் நகர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விஷவாயு தாக்கி ஏற்பட்ட உயிரிழப்புகளை ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரிக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.
மறியல் காரணமாக இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனங்கள் மூலக்குளம், மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. எஸ்.பி., வீரவல்லவன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.