/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 12, 2024 11:51 PM
புதுச்சேரி : நான்காவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி;
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் தாங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக நான்காவது முறையாகப் பதவியேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்று துவங்கும் ஆந்திரப் பிரதேச வரலாற்றின் புதிய அத்தியாயத்தின் பக்கங்கள் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் மகிழ்ச்சியால் நிரப்பப்படும் என்று நம்புகிறேன். தங்களுக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.