/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 14, 2024 06:08 AM

புதுச்சேரி, : பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திரபாபு முன்னிலை வகித்தார்.
பன்னுார், புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் ஞான பிரகாஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, மாணவர்களின் உறுதிமொழியும், நான்கு அணிகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றும் நடந்தது.
விழாவில், சிறப்பு விருந் தினர் சைலேந்திரபாபு, உடற் பயிற்சியின் முக்கியத்துவம், ஒலிம்பிக் விளையாட்டின் சரித்திரம், மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தலைமை பண்பு, சாதனையாளர்களாக உருவாவதற்குரிய வழிமுறைகள், படிப்பின் மீது ஆர்வம், நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதன் தேவைகள் குறித்து பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, அவர் எழுதிய நுாலினை பரிசளித்தார்.