ADDED : ஜூலை 14, 2024 06:09 AM

அரியாங்குப்பம் : புதுச்சேரியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, டி.வி., நகர் அருகே உள்ள செபஸ்தியர் கோவில் தெருவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 11ம் தேதி இறந்து கிடந்தார். அவர் பெயர் பிரபாகரன் எனவும், கோயம்புத்துாரை சேர்ந்தவர் எனவும் இருந்தது.
மேலும், அவரை பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.