/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசு
ADDED : ஜூன் 13, 2024 05:59 AM

புதுச்சேரி : புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரவேஷ் உத்சவ் என்ற பெயரில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி இலக்கியா, 476 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அமிர்த்தவர்ஷினி, 472, மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஆராதனா ஆகியோருக்கு தொகுதி எம்.எல்.ஏ., நேரு பரிசு வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை வழங்கப்பட்டது. சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.11 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். 26 மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதித்திருந்தனர். இதற்காக ஆசிரயர்களை நேரு எம்.எல்.ஏ., பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் இந்திரகுமாரி, துவக்க பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.