/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு துவக்க பள்ளியில் பரிசளிப்பு விழா அரசு துவக்க பள்ளியில் பரிசளிப்பு விழா
அரசு துவக்க பள்ளியில் பரிசளிப்பு விழா
அரசு துவக்க பள்ளியில் பரிசளிப்பு விழா
அரசு துவக்க பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : மார் 14, 2025 04:35 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையம், மேயர் ராமலிங்கம் அரசு துவக்கப்பள்ளியில், இந்த கல்வி ஆண்டிற்கான பல்வேறு போட்டிகள் நடந்தது.
அதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. ஆசிரியை கலைவாணி வரவேற்றார். தலைமை ஆசிரியை சாவித்திரி தலைமை தாங்கினார். ஆசிரியை கிரிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு, தேங்காய்த்திட்டு அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெனின் ஆரோக்கிய மேரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினர்.
பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் கலைவாணி, விஜயகுமார், கிரிஜா, சத்யா, திலகம், காமாட்சி, அபிராமி, ஜெயசுதா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை நாகம்மா நன்றி கூறினார்.