/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜூஸ் வியாபாரியை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு ஜூஸ் வியாபாரியை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ஜூஸ் வியாபாரியை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ஜூஸ் வியாபாரியை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ஜூஸ் வியாபாரியை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2025 04:34 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, நாகாத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி, 30; கடற்கரை சாலையில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கொசப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, அவரது தம்பி விஜி ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, முன்விரோதம் காரணமாக கார்த்திக் அவரது தம்பி விஜி ஆகியோர் கத்தியுடன், மணி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, திட்டி, மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், கார்த்திக், விஜி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.