/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.,சார்பில் அதிகாரியிடம் மனு மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.,சார்பில் அதிகாரியிடம் மனு
மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.,சார்பில் அதிகாரியிடம் மனு
மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.,சார்பில் அதிகாரியிடம் மனு
மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.,சார்பில் அதிகாரியிடம் மனு
ADDED : ஜூன் 24, 2024 05:00 AM

புதுச்சேரி, : நெல்லிதோப்பில் மீன் மார்க்கெட் கட்டித்தர வலியுறுத்தி, நெல்லித்தோப்பு தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக்கேயன் புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயத்தினை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி நெல்லித்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மீன் மார்க்கெட் இருக்கும் இடத்தில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு,சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ஆகையாலல் நெல்லித்தோப்பு மீன்மார்க்கெட் உடனடியாக கட்ட வேண்டும், அதேபோல், பெரியார் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகளை அகற்ற வேண்டும், சக்தி நகரில் நடைபெற்று வரும் சைடு வாய்க்கால் பணி பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி சைடுவாய்கால் பணியினை துரிதப்படுத்த வேண்டும், மனுவினை பெற்றுக் கொண்ட உதவி பொறியாளர் உடனடியாக செய்து தருவதாக கூறினார்.
தி.மு.க., தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், தொ.மு.ச., அமைப்பாளர் அடைக்கலம், ஐ.டி.,அருண், தொகுதி நிர்வாகிகள் அர்ஜூணன், ரமேஷ் ,ராம்குமார் ,கலியபெருமாள், மரியநாதன், கிளைச் செயலாளர்கள் சுதன் ராஜ், தயால் ராஜ், பிரான்சிஸ், ஆதி, உலகநாதன், நியூ பிரான்சிஸ், அருண், நெல்லித்தோப்பு மார்க்கெட் வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் பாஸ்கர், முகமது இஸ்மாயில், சுரேஷ் ,மூர்த்தி ,சாந்தி ,லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.