ADDED : ஜூலை 21, 2024 05:52 AM

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி வருவாய் துறை மூலம் 'கிராமங்களை நோக்கி மக்கள் குறை கேட்பு முகாம்' மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
வில்லியனுார் துணை கலெக்டர் சோமசேகர் அப்பாரு கொட்டாரு தலைமை தாங்கினார். பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் சதீஷ், கரியமாணிக்கம் கிளை மேலாளர் ராஜ்பாபு உட்பட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நலவழித்துறை, இந்தியன் வங்கி, சட்டப் பணியாளர்கள் ஆணையம், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உள்ளிட்டபல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தில்இந்தியன் வங்கி கரியமாணிக்கம் கிளை, புதுவை பாரதியார் கிராம வங்கி சார்பில், கடன்கள் மற்றும் வருவாய் சான்றிதழ்களை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.