/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜூலை 21, 2024 05:53 AM
பட்டதாரி ஆசிரியர்கள் வயது தளர்வு விஷயத்தில் வரும் 31ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித் துறையில் 67 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு இரண்டாண்டு வயது தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், இறுதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வரும் 31ம் தேதிக்குள் புதுச்சேரி அரசு பதில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு மனுதாரர் ஒரு வாரத்திற்குள் பதில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் ஒத்தி வைத்தனர்.
மேலும் அன்றைய தினம் புதுச்சேரி கிளையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தனர்.
ஆரம்ப பள்ளி விவகாரத்தில் வயது தளர்வு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு முறையீடு செய்துள்ளது.
மத்திய அரசு, உள்துறை, யூனியன் பப்ளி சர்வீஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் வயது தளர்வு குரூப்-பி பதவியில் இரண்டு ஆண்டுள் வயது தருவதில் சட்டத்தில் இடமில்லை எனக் கூறி, அனுமதி தர மறுத்து விட்டன.
இது தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறையில் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்து, அரசு பணியிடங்களை நிரம்பும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. எனவே மத்திய அரசு, உள்துறை, யூனியன் பப்ளி சர்வீஸ் கமிஷனையும், இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் சேர்க்க பட்டதாரிகள் முடிவு செய்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.