/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
மின் கம்பியில் சிக்கிய மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 03, 2024 04:49 AM

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் மின் கம்பியில் சிக்கி காயமடைந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அரியாங்குப்பம் பூபாலன் தங்கமணி திருமணம் மண்டபம் அருகே உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது.
நேற்று மாலை மயில் ஒன்று பறந்து சென்று மின் கம்பியில் உரசி கீழே விழுந்து காயமடைந்தது.
தகவலறிந்த, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி செய்தனர்.
பின், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, மயிலை ஒப்படைத்தனர்.