ADDED : ஜூன் 03, 2024 04:44 AM

புதுச்சேரி, : துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடந்தது.
வின்சென்ட் தெ பால் எத்தியேன் கிளை சபை மற்றும் ஜிப்மர் சார்பில் பசிலிக்காவில் நடந்த ரத்த தான முகாமை, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பசிலிகா அதிபர் பிச்சைமுத்து, பாதிரியார் சின்னப்பன் முன்னிலை வகித்தனர். வின்சென்ட் தெ பால் எத்தியேன் கிளை சபை தலைவர் ரெமோ வரவேற்றார். சபை செயலாளர் கசிமீர் அமலோற்பவநாதன் நன்றி கூறினார்.