Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்

ADDED : ஜூலை 21, 2024 05:36 AM


Google News
புதுச்சேரி: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 30ம் தேதி துவங்கி ஆக., 3ம் தேதி வரை, பவித்ரோற்சவம் நடக்கிறது.

உலக நன்மைக்காகபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, சீதா லட்சுமண பரத சத்ருக்ன சுக்ரீவ அங்கத ஜாம்பவ விபீஷண அனுமத் சமேத பட்டாபிேஷகராமச்சந்திரமூர்த்தி,ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகளுக்கு வரும் 30ம் தேதி முதல் ஆக., 3ம் தேதி வரை திருப்பவித்ரோற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 30ம் தேதி மாலை பூர்வாங்க பூஜைகள், யஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 31ம் தேதி காலை கும்பஸ்தாபனம், அக்னி மதனம், பவித்ரமாலை பிரதிஷ்டை, மகா சாந்தி ஹோமம், மாலையில் நித்ய ஹோமம் நடக்கிறது. 1 மற்றும் 2ம் தேதி காலை, மாலையில் நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், மகா சாந்தி ஹோமம் நடக்கிறது.மறுநாள் 3ம் தேதி காலை 8:00 மணிக்கு,சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலயம் வலம் வந்து யாக சாலையில் 7 காலம் பூர்த்தியாகி, பவித்ர மாலை களைதல், சிறப்பு திருவாராதனம் சாற்றுமுறை நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us