/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாங்க் ஆப் பரோடா 8,275வது கிளை வில்லியனுாரில் துவக்கம் பாங்க் ஆப் பரோடா 8,275வது கிளை வில்லியனுாரில் துவக்கம்
பாங்க் ஆப் பரோடா 8,275வது கிளை வில்லியனுாரில் துவக்கம்
பாங்க் ஆப் பரோடா 8,275வது கிளை வில்லியனுாரில் துவக்கம்
பாங்க் ஆப் பரோடா 8,275வது கிளை வில்லியனுாரில் துவக்கம்
ADDED : ஜூலை 21, 2024 05:38 AM

புதுச்சேரி: பாங்க் ஆப் பரோடா வங்கியின் 8,275வது கிளை வில்லியனுார் கிளை துவக்க விழா நேற்று நடந்தது.
இந்தியாவின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா, நகரங்கள் மட்டும் இன்றி, கிராமங்களில் தனது கிளைகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. சுய உதவி குழுக்களுக்கு, கடனுதவி வழங்கி தொழில் அபிவிருத்திக்கு கைகொடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியத்தில், வில்லியனுாரில் 8,275 வது கிளை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கிளை மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி மற்றும் துணை பிராந்திய தலைவர் பிரகாஷ் ஆகியோர் வில்லியனுார் கிளை வங்கியை துவக்கி வைத்து, வங்கியின் சிறப்புகள் மற்றும் கடனுதவி திட்டங்களை எடுத்துரைத்தனர். சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாகபாங்க் ஆப் பரோடாவின் 117 வது நிறுவன நாளையொட்டி, வங்கியின் புதுச்சேரி பிராந்திய ஊழியர்கள் சார்பில் புதுச்சேரி கடற்கரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. நிகழ்ச்சியில், துாய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.