/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலய பூஜை கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலய பூஜை
கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலய பூஜை
கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலய பூஜை
கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலய பூஜை
ADDED : மார் 14, 2025 04:14 AM

புதுச்சேரி: கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் பாலாலயம் விழா நடந்தது.
கதிர்காமத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கதிர்வேல் சுவாமி, முத்துமாரியம்மன் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாலாலய பூஜை நடந்தது.
முதலில், முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர், அம்மன், நாகர் சன்னதிகள் மற்றும் விமானம், ராஜகோபுரத்து பாலாலய பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கதிர்வேல் சுவாமி கோவிலில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத கதிர்வேல் சுவாமி, கைலாசநாதர், காமாட்சி அம்மன், பரிவார சுவாமிகள் மற்றும் விமானங்கள், ராஜகோபுரத்துக்கு பாலாலயம் நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி இளங்குமரன், திருப்பணி குழுவினர், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.