/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : மார் 14, 2025 04:13 AM

மரக்காணம்: பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துணை இலக்கியங்கள் என்ற கருத்தில் எஃபோனிகா 2025 என்ற பெயரில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரியின் செயலர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார்.
காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மைய உதவிப் பேராசிரியர் பழனிச்சாமி ஆங்கில இலக்கியக் கண்காட்சியை திறந்து வைத்தார். ஆங்கிலத் துறைத் தலைவர் கவிதா வரவேற்றார்.
கருத்தரங்கில் மாணவிகள் கட்டுரைகளை வழங்கினர். சிறந்த கட்டுரைக்கு பரிசும், கட்டுரை வாசித்த மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப் பட்டது.
ரோமியோ ஜூலியட் கதையை மாணவிகள் ஆங்கில மொழியில் நாடகமாக சித்தரித்து வழங்கினர். உதவிப் பேராசிரியர் சத்யா நன்றிகூறினார்.