/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழைநீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை மழைநீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை
மழைநீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை
மழைநீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை
மழைநீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 14, 2024 06:14 AM

பாகூர், : பாகூர் பகுதியில் பெய்த மழையால், நடவு செய்யப்பட்டுள்ள நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது திடீர் மழை பெய்து வருகிறது.
பாகூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மழை நீர் வெளியேறி வழியின்றி வயல்வெளியில் தேங்கி நிற்பதால், சொர்ணாவாரி பருவ நெல் நாற்றுகள் நீரில் மூழ்கிய உள்ளன.
சேலியமேடு, பாகூர், பின்னாட்சிக்குப்பம், குருவிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையையொட்டி அமைந்துள்ள வயல்வெளி பகுதியில், மழை நீர் வெளியேறி வழின்றி தேங்கி நிற்கிறது.
இயந்திரம் மூலமாக நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் என்பதால், வளர்ச்சி குறைவாக இருக்கும். மழை நீரை அடுத்த சில நாட்களில் வெளியேற்றிட வேண்டும். இல்லையென்றால், பயிர்கள் அழுகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.