/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ரவுடிகள் வீடுகளில் 'ஆப்ரேஷன் திரிசூலம்' சோதனை 8 பேர் கைது: 43 பேர் மீது வழக்கு பதிவு புதுச்சேரி ரவுடிகள் வீடுகளில் 'ஆப்ரேஷன் திரிசூலம்' சோதனை 8 பேர் கைது: 43 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி ரவுடிகள் வீடுகளில் 'ஆப்ரேஷன் திரிசூலம்' சோதனை 8 பேர் கைது: 43 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி ரவுடிகள் வீடுகளில் 'ஆப்ரேஷன் திரிசூலம்' சோதனை 8 பேர் கைது: 43 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி ரவுடிகள் வீடுகளில் 'ஆப்ரேஷன் திரிசூலம்' சோதனை 8 பேர் கைது: 43 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 15, 2024 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆப்ரேஷன் திரிசூலம் திட்டத்தின் மூலம் ரவுடிகள் வீடுகளில் நடத்திய சோதனையில், 8 பேர் ஆயுதம் வைத்திருந்தாக கைது செய்து,43 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கும், ரவுடிகளை ஒழிப்பதற்கு போலீசில் கடந்த 2021ல் ஆப்ரேஷன் திரிசூலம் என்ற திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, ரவுடிகள் நடவடிக்கையை கண்காணிக்கவும், வீடுகளில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என ஆய்வு நேற்று நடந்தது.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில், ரவுடிகள் தடுப்பு பிரிவு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், வடக்கு எஸ்.பி., வீரவல்லவன் தலைமையில், கிரைம் பிரிவு போலீசார் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 65 நபர்களிடம் விசாரிக்கப்பட்டதில், 8 பேர் ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்டனர்.
43 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'போலீஸ் தலைமையகம் அறிவுறுத்தலின்படி, இனி வரும் காலங்களில் குண்டர் சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழைய குற்றவாளிகள் மறுபடியும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கும் வண்ணம் தீவிர நடவடிக்கை, எடுக்கப்பட்டு வருகிறது.
மிஷன் இளமையின் ஒரு பகுதியாக கஞ்சா வழக்கு பின்னணி கொண்ட 2 இளம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் மறுவாழ்வுக்காக தொழில் பயிற்சி அளிக்க போலீஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது' என்றனர்.